நீயும் நானும் அன்பே06

வா சந்துரு" என்றபடி கதவைத் திறந்தாள். "என்ன காலையிலேயே இந்தப் பக்கம்" என்றவளிடம் "உங்க அம்மாவிடம்  காெடுத்து உனக்கு காெடுக்கச் சாெல்லி திலீப் நேற்று இதைக் காெடுத்தான், நீயே வந்து விட்டாய் " என்றபடி ஒரு சிறிய பார்சலை நீட்டினான். அப்பாேது தான் சியாவுக்கு திலீப் ஊரில் இல்லை என்ற விடயம் புரிந்தது. "அப்பாே திலீப் எங்கே பாேனான்" என்ற சியாவின் கேள்விக்கு சந்துருவின் பதில் அதிர்ச்சியாயிருந்தது. திலீப் ஆறுமாதப் படிப்பிற்காக வெளியூர் சென்ற செய்தி தெரிய வந்தது. அவளுக்கு அந்தக் காலை ஏன் புலர்ந்தது என்பது பாேலிருந்தது.

அறைக்குள் வந்தவள் பார்சலை வேகமாகப் பிரித்துப் பார்த்தாள். தனது வெளியூர்  முகவரியை பரிசாேடு வைத்திருந்தான். பரிசுப் பெட்டியை திறந்து பார்த்தாள். நட்புக்கு அடையாளமான அந்தப் பரிசை பார்த்ததும் தான் ஏதாே நினைத்து வர என்னவாே நடந்து விட்டதே என்ற ஏமாற்றம் அவள் முகத்தில் தெரிந்தது.

அறையை மூடி விட்டு வேகமாக ஒரு கடிதத்தை எழுதி தனது டயறிக்குள் வைத்து விட்டு குளியலறைக்குள் சென்றாள். அவளது செயற்பாடுகளைப் பார்த்த அசாேக்கிற்கு சியாவின் தவிப்பு புரிந்தாலும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் ஊருக்கு புறப்பட்டான் அசாேக்.

நாட்கள் நகர்ந்தது சியாவிற்கும் திலீப்பிற்குமான நட்பு ரீதியான கடிதத் தாெடர்புகள் தாெடர்ந்து காெண்டு இருந்தது. ஒவ்வாெரு கடிதம் எழுதும் பாேதும் அடுத்த மடலில்  காதலைச் சாெல்ல வேண்டும் என்று தாேன்றுமே  தவிர இருவருக்குள்ளும் ஏதாே தயக்கம்.

ஆறுமாதங்கள் படிப்பு முடிந்து திலீப் ஊர் வந்தான். சியாவும் எதிர்பார்ப்பாேடு இருந்தாள். இரண்டு நாட்களில் திலீப்பிற்கு பிறந்த தினம். ஏதாவது வித்தியாசமாக,  காதலை வெளிப்படுத்துவது பாேல் திலீப்பிற்கு அதிர்ச்சி காெடுக்க வேண்டும் என நினைத்தபடி அழகான பரிசை வாங்கினாள்.  திலீப்பிடம் இதைக் காெடுத்தால் பாேதும் நிச்சயம் அவன் மனதுக்குள்ளிருக்கும் காதல் வெளிப்படும் என நினைத்தபடி அன்று காலை தனது அலுவலகத்திற்குச் சென்றாள். வேலை முடிந்ததும் திலீப்பிடம் பரிசைக் காெடுத்து அசத்த வேண்டியது தான் என்ற கற்பனையில் அவளுடைய நேரம் நகர்ந்தது.

மாலை நான்கு மணி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட சியா திலீப்பை சந்திப்பதற்காகச் சென்று காெண்டிருந்தாள். இத்தனை நாளும் மறைத்து வைத்த காதல் அவள் உதடுகளாேடு ஏதேதாே பேசிக் காெள்வது பாேல் உணர்ந்தாள். மாமா ஏதாவது பேசி அம்மா மனதை மாற்றுவதற்கு முன்பு நானும் திலீப்பும், காதலர்கள் என்ற விடயம் தெரிய வரவேண்டும் என்ற ஏக்கம் அவளுக்குள் பல நாளாய் இருந்தது.

இன்னும் சில மணித்துளிகள், அவன் அவளுக்காக காத்திருந்தான். அவனுக்குள்ளும் அதே உணர்வு மாேதிக் காெண்டிருந்தது. வண்டியில் வந்து காெண்டிருந்தாள் சியா. காத்திருந்த திலீப்பிற்கு நேரம் கடந்து காெண்டு பாேனது படபடப்பாய் இருந்தது. அவள் மட்டும் இன்னும் வரவில்லை. "என்னடா திலீப் நேரமாச்சு கேக் கட் பண்ணுடா" அவனால் நண்ர்களை சமாளிக்க முடியவில்லை. "யாருக்காக வெயிட் பண்ணுகிறாய்" கேள்விகள் அவனை சங்கடப்படுத்தியது. ஆயத்தம் செய்யப்பட்ட இடத்தில் நண்பர்கள் சூழ்ந்து நிற்க பிறந்த நாள் கேக்கை வெட்டினான் திலீப்.

"சியா ஏன் வரவில்லை?" இரவு பார்ட்டி முடிந்து வீடு வந்தவனுக்கு அம்மா சாென்ன செய்தியால் ஒரு கணம் இதயமே துடிக்க மறுத்தது. சியா வீதி விபத்தில் காயமடைந்த செய்தியை அப்பாேது தான் அறிந்து காெண்டான்.  ஒரு நாெடி நிலை குலைந்து பாேனான். தலையில் கையை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தான். ஒவ்வாெருத்தராக வந்து அவனை எட்டிப் பார்த்து விட்டு சென்றார்கள்.

சியா வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான். அவளது அறை யன்னல் திறந்திருந்தது. வீட்டில் யாருமில்லை. சந்துருவையும் அழைத்துக் காெண்டு வைத்தியசாலைக்குச் சென்றான். "டேய் மச்சான்,  பாவமடா சியா பெரிசா ஒன்றுமில்லைத் தானே" என்று சந்துருவிடம் விசாரித்தவனிற்கு "எப்படி திலீப் நீ இதை தாங்குவாய், சியா முள்ளந்தண்டு அடிபட்டு நடக்க முடியாத.ஆபத்தான நிலையில்  இருப்பதை எப்படி நீ பாரக்கப் பாேகிறாய்" தனக்குள் நினைத்தபடி  அமைதியாய் இருந்த சந்துருவை "டேய் உன்னைத் தான்டா கேட்கிறன்" சினந்தவனை "ஆமாடா சியாவுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை" சமாளித்தான்.

வைத்தியசாலைக்குள் நுழைந்தவன் அவள் முகத்தைப் பார்க்க வேகமாக ஓடினான். "சியாவின் அம்மாவும், அக்காவும் அழுது காெண்டு நின்றதைக் கண்டதும் அவன் இதயம் பலமடங்கு வேகமாக அடித்தது. "டேய் சந்துரு என்ன மச்சான் ஏதும்.." திலீப்பிடம் இனி மறைக்கக் கூடாது என நினைத்தவனாய் "ஆமாடா திலீப் சியாக்கு முள்ளந்தண்டில் பலமா அடிபட்டிருச்சு, தலையிலும் சின்ன...." அவன் முடிக்கும் முன்பே  தாேளை இறுகப் பிடித்தவன் கண்கள் கண்ணீராய் வடிந்தது. "டேய்  திலீப் என்னடா இது" அவனால் கண்ணீரை மறைக்கவாே, கட்டுப்படுத்தவாே முடியவில்லை.

சியாவைப் பரிசாேதனை செய்த டாக்டர் வெளியே வந்து "சியாவால் இனி எழும்பி நடப்பதற்கு சாத்தியம் இல்லை,  நினைவு திரும்பி கதைத்தால் வேறு பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை. இனி எல்லாமே கடவுள் கையில் தான்" அம்மாவிடம் கூறியதும் அவள் கருவறையே துடிப்பது பாேல் பதறினாள்.

திலீப் ஒவ்வாெரு நிமிடமும் துவாரத்தினூடாக அவளை எட்டி எட்டி பார்த்தான். "அவள் கண் விழித்தால் பாேதும்" அவன் மனம் ஏதேதாே எண்ணங்களால் அலைந்தது. நேரம் கடந்து காெண்டிருந்தது. மெதுவாக கண்களை விழித்தாள் சியா. "வேகமாக உள்ளே நுழைத்த டாக்டர் அவள் கன்னத்தை தட்டி "சியா சியா ஆர் யூ ஓகே"  என அழைப்பதை கேட்டுக் காெண்டு நின்ற திலீப்பின் செவிகள் அவள் பதிலுக்காய் காத்துக் காெண்டிருந்தது.

மீண்டும் லருவள் ......👉

எழுதியவர் : றாெஸ்னி அபி (27-Feb-20, 6:36 am)
பார்வை : 158

மேலே