உண்மையான வசந்தகாலம்

ஹாலே அப்பா... சொல்லுங்கப்பா

... ம்மா... செல்லப் பொண்ணே...
அப்பாக்கு உடம்புக்கு முடியலடா...
கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாடா...

இதோ கிளம்பிட்டப்பா...
உங்களுக்கு ஒன்னும் ஆகாது...
நான் வர தைரியமா இருங்கப்பா...
..........

அத்தை... அத்தை...

என்ன மருமகளே...

அப்பாவுக்கு உடம்பு முடியலையா அத்தை...
வீட்டு வரைக்கும் போயிட்டு வர...
பசங்க ஸ்கூல் இருந்து வந்தாங்கன்னா பாா்த்துங்க...
நான் இன்னிக்கு வேலைக்கு போகல லீவு...
அப்பாவ பாா்த்துட்டு வர...

சரி மருமகளே...
நீ போயிட்டு வா...

( சிறிது நேரத்தில் - தன் தந்தை இல்லத்தில்... )

அப்பா.. அப்பா...

என்னாச்சுப்பா...

வாம்மா...
அப்பாக்கு இதயம் படபடன்னு இருக்கும்மா...
ரொம்ப வலியா இருக்கு...

வாங்கப்பா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்...

வேணாம்மா...
நான் ஹாஸ்பிட்டாலுக்கு போறது வேஸ்ட்...
அதுக்குள்ள நான் இறந்துடுவ...

ஏம்ப்பா... அப்படி சொல்றீங்க..
வாங்கப்பா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்...

ரொம்ப நாளா இந்த வலி இருக்குமா..
உனக்கு தெரியாம மாத்திரை சாப்பிட்டு இருந்த...

ஏம்ப்பா... என் கிட்ட நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா டீரிட்மென்ட் பாா்த்து இருக்கலாம்...ல...

இல்லம்மா... நீயே புள்ளைகளை வெச்சுகிட்டு... நிக்க நேரமில்லாம்மா உழைக்கிற.. நான்வேற ஏம்மா உன்னை கஷ்டப்படுத்தனும்... அதான்....

அப்பா... எப்பவும் நீங்க தான்... எங்களுக்கு அட்வைஸ் பன்னுவீங்க.. எதுவாயிருந்தாலும் முன்னாடியே சொல்லுங்க.. முன்னாடியே சொல்லுங்கன்னு.. நீங்க மட்டும் ஏம்ப்பா முன்னாடியே சொல்லாம இருந்தீங்க... நீங்க என்னை வளர்க்கும்போது.. பாராமா நினைக்காதபோது... நான் மட்டும் எப்படிப்பா உங்கள பாரமா நினைப்பேன்...

அத விடுமா...

அப்பாக்கு ஒரு சின்ன ஆசைடா...

என்னப்பா...

உன்மடியில தலை வச்சுகிட்டுமாட..

வச்சுக்குப்பா..

ம்மா... ம்மா...
நான் ஒன்னு சொல்லட்டுமாட..

சொல்லுங்கப்பா...

பிறக்கத்துக்கு முன்னாடி அம்மாவோட கருவறையில - நாம உணரமுடியாத வசந்தகாலமா இருக்கு... அதுக்கப்புறம் அம்மா-அப்பாங்கிற அன்பின் அரவனைப்புல ஒரு வசந்தகாலம் - அதுக்கப்புறம் பள்ளி-கல்லூரி என்ற நட்பின் அரவணைப்புல ஒரு வசந்தகாலம் - அதுக்கப்புறம் மனைவி - உறவுகள் என்கிற ஒரு வசந்தகாலம் - கடைசியா... ஒரு வசந்தகாலம் இருக்கும்மா... அது இப்ப எனக்கு வரமா கிடைச்சிருக்கு... என் மக மடியில... என் மகள பாா்த்துக்கிட்டே சாகிறது..... உண்மையான வசந்தகாலம்..... என்று சொல்லி முடிய- தந்தையின் உயிர் பிரிந்தது....!!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (27-Feb-20, 8:37 am)
பார்வை : 120

மேலே