வயதானவர்கள் முட்டாள் இல்லை

ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக்
கொண்டிருக்கும் போது அவளைக் காண
அவளது தோழன் வருகிறான்.
உடனே அந்த பெண் அவனிடம்," நீ
பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில்
இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை
வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை
நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே
காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில
நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.
உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த
புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள..
கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு"
என்ற புத்தகத்தை பெற்று கொள்"
என்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ
நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில்
உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல்
மேனேஜ்மென்ட் புத்தகத்தை
கொண்டு வா என்கிறான்.
உடனே அந்த பெண் அவனிடம், பகத்
எழுதிய "நான் உன் நம்பிக்கையை
காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும்
உனக்கு கொண்டு வருகிறேன்
என்கிறாள்.
உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த
பெண்ணிடம், "இவன் இவ்வளவு
புத்தகத்தையும் படிப்பானா?" என்று
கேட்கிறார்.
உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா,
அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்"
என்று கூறுகிறாள்.
உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ
அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய
"வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை"
என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு
என்கிறார்.

எழுதியவர் : (27-Feb-20, 10:49 am)
பார்வை : 125

மேலே