அல்வா டைம்ஸ் செய்திகள்

பகுதி நேர வேலை வாய்ப்பு எனக் கூறி பல கோடி ரூபாய்
மோசடி செய்தவன்
இன்று சென்னையில் காவல்துறையால் மடக்கி பிடிக்கப்பட வில்லை

தாம்பரம் பகுதியை சார்ந்த பயோரியா பிளாக்கி என்பவர்
கடந்த சிலநாட்களுக்கு முன்பு துண்டு பிரசுரங்கள் மூலம் சென்னை முழுக்க விசித்திர விளம்பரம் தந்தார்..
பகுதி நேர வேலை செய்தால் பத்தாயிரமும்
முழுநேர வேலை செய்தால்
முப்பதாயிரமும்
ஞாயிறு மட்டுமென்றால்
நாலாயிரமும்
சம்பாதித்திடலாம் என்ற செய்தி அடங்கிய பிரசுரம்தான் அது.
பிளாக்கியின் இந்த சதிதிட்டம் தெரியாத பலரும் அவரை நாடினர்
லட்சம் தலைகள் கூடியது.
தலைக்கு 500 என வசூலித்த பிளாக்கி அனைவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார்.
கடைசி வரை வேலை என்னவென்றே சொல்ல வில்லை.
அதில் கடுப்பாகி போன ஒருவர்
எங்களுக்கு என்ன வேலை
என்று கேட்டார்.
வேப்ப மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு வகையான லேகியங்களை அங்கே அறிமுக படுத்தி அதை ஆளுக்கொன்றாய் கொடுத்தார்.
இந்த லேகியம் அமேசான் காடுகளில் செழித்து வளர்ந்துள்ள வேப்பமரத்தில் இலைகளை வட அமெரிக்காவின் பகாரோ அருவி நீர் கலந்து அம்மியில் அரைத்து தயாரிக்கப்பட்டது.
இதை நீங்கள் உண்டால்
லைஃப் லாங் மெமரி பவர் கிடைக்கும்.
இதை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துவதுதான் உங்கள் வேலை ஓடுங்கள் என்று அனைவரையும் உற்சாக படுத்திய பிளாக்கி பின் வாசல் வழியாக பிரான்சுக்கு பறந்துவிட்டார்.
அதன் பின்னர் அவர் பிடிபடவே இல்லை.
நேற்று முன்தினம் மொட்டையடித்து கொண்டு பிராட்வே ரயில் நிலையம் அருகே கிர்ணிபழம் சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவரை காவல்துறை பிளாக்கி என அடையாளம் கண்டது.
உடனே அவனைபிடிக்க தனிப்படை ஒன்று தயார் செய்யப்பட்டு வலை போட்டு பிடித்ததில் அவன் பிளாக்கி இல்லை என்பது தெரியவந்தது.
உருவ ஒற்றுமையில் பிளாக்கியை போன்று இருந்த அவன் பெயர் சோமாசு கிவாசர் என்றும் சைதாப்பேட்டையில் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருப்பவன் என்றும் தகவல் கிடைத்தது.
சரி பிடித்ததுதான் பிடித்தோம் ஆசைக்கு இவனை 4 அடித்து அனுப்புவோம் என்று முடிவெடுத்த காவல்துறையினர் அவனை வெளுத்து அனுப்பினர்.
ஆனால் பல கோடி ரூபாய் மோசடி செய்த பிளாக்கி இதுவரை சிக்காததால் காவல்துறையினர் அவனை மடக்கிபிடிக்கவில்லை என்று உயர்காவல் அதிகாரி ஜடாயு மேணன் பத்திரிக்கைக்கு ஸ்டைலாக பேட்டி கொடுத்தார்.

எழுதியவர் : (26-Feb-20, 7:52 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 66

மேலே