தாலி கட்ற நேரமாச்சு

ஏம்ப்பா....
ஏன் எல்லாரும் எழுந்துட்டாங்க...?

அடn என்னப்பா நீ...
தாலி கட்ற நேரமாச்சுல..
அதான் எல்லாரும் எழுந்துட்டாங்க...
வா... முன்னாடி போகலாம்...

ஏம்ப்பா...
நாம முன்னாடி போன...
நமக்கு பின்னாடி இருக்கிறவங்களுக்கு மறைக்காதா...?

அத பத்தி நமக்கு என்னப்பா கவலை...
நாம வந்தம்மா.... முன்னாடி போயி அர்ச்சதைய போட்டு.. சாப்பிட்டம்மா... தாம்பூலம் வாங்கினம்மா... கிளம்பினாம்மான்னு... இருக்கனும்...

வா முன்னாடி போகலாம்...

சரி... சரி...
நான் வேணான்னு சொன்னா...
நீ விடவா போற...
வா போகலாம்...
...........
...............

என்னப்பா...
நமக்கு முன்னாடி...
இத்தனை பேர் நிக்கிறாங்க...?

நான் அப்பவே சொன்ன...
உன்னாலா தா எல்லாம்...
பொண்ணும் மாப்பிள்ளையும் தெரியவே இல்ல பாரு...

அட... விடுப்பா...
இதுக்கு முன்னாடி மட்டும் தெரிஞ்சாங்கலான்னா...
கேமரா மேனும்.. லைட்ஸ் மேனும் மறைச்சுகிட்டுத்தான இருந்தாங்க... பெரும்பாலான கல்யாணம் - உறவுக்கு முன்னாடி நடக்கிறதில்ல... கேமராக்கு முன்னாடி தான் நடக்குது...
அதுக்கப்புறம் எல்லாரும்...கல்யாணத்தையே...
வீடியோல தான் பார்க்கிறாங்க...

நீ அர்ச்சதைய பாேடு ... நாம போகலாம்...

சரி... சரி... நான் போட்டுட்ட...

நானும் போட்டுட்டப்பா...

ஆனா... ரொம்ப நேரமா...
என்னை யாரோ பின்னாடி தள்ளிக்கிட்டே இருக்காங்க...

யோவ்... யாருய்யா நீ...?
பின்னாடி... சும்மா தள்ளிக்கிட்டு...

சார்... சார்... திட்டாதீங்க...
நான்தான் பொண்ணோட அப்பா
கொஞ்சம் வழிவிடுங்க சார்... அர்ச்சதைய போடனும்.......!!!

( பெரும்பாலான திருமண விழாக்களில் தலைமை வகிப்பது கேமராக்கள்தான்.. கேமராக்களே வேண்டாம் என்று கூறவில்லை... ஆனால் சிலநேரங்களில்... கேமராக்கள் நெருக்கமாயிருக்கு... உறவுகள் விலகியிருக்கு.... )

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (28-Feb-20, 8:05 am)
பார்வை : 146

மேலே