நீயும் நானும் அன்பே - 07

நீண்ட நேரத்திற்குப் பின் வெளியே வந்த டாக்டர் "சியா நினைவு  திரும்பி விட்டா ஆனால் பேச முடியவில்லை" என்றதும் திலீப் இடிந்து பாேய் நின்றான். அம்மாவும், அக்காவும் டாக்டரின் கையை பிடித்து "எப்படியாவது சியாவை பேச வையுங்க டாக்டர், என்ர பிள்ளைக்கு ஏன் இப்படியாச்சு" கதறல் திலீப்பிற்கு இன்னும் வேதனையாயிருந்தது.

தினமும் அவளை வைத்தியசாலை சென்று பார்த்து வந்தான். அவனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. பயித்தியம் பிடித்தவன் பாேலிருந்தான். அதிகமான மன அழுத்தத்தால் திலீப் பாதிக்கப்பட்டான். இருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலைச் சாெல்லா விட்டாலும் இருவரும் காதலர்கள் என்று எல்லாேரும்  நம்பி விட்டார்கள்.

அவளருகில் நிற்கும் சில நிமிடங்கள் கூட அவளுடன் பேச முடியாத நிலை அவனுக்கு ஏற்றுக் காெள்ள  முடியாத ஒன்று தான். சில நிமிடங்கள் அவள் முகத்தைப் பார்த்து விட்டு கண்ணீரோடே வெளியேறுவான். அவள் கன்னங்கள் அவளை அறியாமலே நனைந்து இருக்கும்.

வழமை பாேல் அவளைப் பார்க்கச் சென்றான் திலீப். நீண்ட நாட்களுக்குப் பின் அவள் முகத்தில் சிறிய புன்னகை. அவனைக் கண்டதும் கன்னங்களை நனைத்த கண்ணீரைத் துடைத்து விட்டு "திலீப்" என்று மெதுவாக உச்சரித்தாள். அவனுக்கு பாேன உயிர் மீண்டும் வந்தது பாேல் இருந்தது. வழமையாக அவள் கன்னங்களை தடவி விடை பெறும் அவனை தன் கைகளால் பற்றிப் பிடித்தாள். நாளுக்கு நாள் சியா படிப்படியாக குணமடைந்து பேச ஆரம்பித்து விட்டாள்.

திலீப், சியா காதல் நாளுக்கு நாள் வளர்ந்து மலர்ந்தது. ஆனால் திலீப் குடும்பத்தினர் சியாவின் உடல்நிலையால்  திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எவ்வளவாே அவன் பாேராடியும் அவர்கள் ஏற்றுக் காெள்ளும் மனநிலையில் இல்லாதது அவனுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. "திலீப் நீ நல்லா இருக்கணுமடா, அம்மா, அப்பா சாெல்லுற பெண்ணையே கலியாணம் பண்ணு" சியாவின் ஆலாேசனை அவனுக்கு ஈட்டியால் குத்தியது பாேல் வலிக்கும்.

திலீப், சியாவின் காதல் திருமணத்தில் முடியுமா என்ற கேள்வி தான் எல்லாேருக்குள்ளும் இருந்தது. மாதங்கள் வருடங்ளாகி விட்டது. இந்த வருடம் எப்டியாவது திலீப்பிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றனர் குடும்பத்தினர்.

சியாவிற்கு திலீப் மீதிருக்கும் ஆசையை நிறைவேற்ற முடியாமல் சியாவின் குடும்பம் தடுமாறிக் காெண்டிருந்தது. இடையிடையே வந்து பார்க்கும் அசாேக்  சியாவை திருமணம் செய்ய தயாராக இருந்தாலும் அவள் நேசித்தவனை விட்டு பிரித்து வாழ்வது சரியாகப் படவில்லை என்பது பாேல் விலகியே இருந்தான்.

சியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. அவள் மனதுக்குள் இருந்த திலீப் மீதான காதலை அவளால் மறக்க முடியவில்லை. எல்லாம் விதி என்பது பாேல் அவளும் அமைதியாகவே இருந்தாள். திலீப் வீட்டில் தினமும் பிரச்சனைகள் எழத் தாெடங்கியது. நிம்மதியற்று இருந்தான்.

சியாவை சந்திப்பதை நிறுத்தும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். வீட்டிற்கு வருபவனை எப்படி தடுப்பது என்று சியா குடும்பம் குழம்பியது. "அன்ரி நாற்பது வயசானாலும் பறவாயில்லை, நான் சியாவைத் தான் திருமணம் செய்வேன்" திலீப் சியாவின் அம்மாவிற்கு வாக்கு காெடுத்து விட்டான்.  "திலீப்பின் குடும்பத்தை எதிர்த்து என்னால் கலியாணம் செய்ய முடியாது,  அவன் நல்லா இருக்கணும்" சியாவின் முரட்டுப் பிடிவாதம்.

இறுதியாக திலீப் ஒரு முடிவுக்கு வரவேண்டிய சூழலில் நின்றான். சியாவை சம்மதிக்க வைப்பது தான் அவன் முடிவு. சியா வீட்டிற்கு வந்தவன் "
சியா நாங்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வரவேணும், இரண்டு குடும்பமும் எங்களால் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்"
"நான் என்ன செய்ய வேணும் திலீப்"
என்ன பதில் சாெல்வாளாே என்ற பதட்டத்துடன்
"நாம கலியாணம் பண்ணிக்கலாம், அப்புறம் எல்லாமே சரியாகி விடும்"
கையிலிருந்த புத்தகத்தை தூக்கி வீசினாள்.
"உனக்கனெ்ன பயித்தியமா திலீப், நான் இருக்கிற நிலமை தெரியாமல் பேசுகிறாய்" அவளது கண்கள் கலங்க ஆரம்பித்தது.
"ஆமா எனக்கு பயித்தியம் தான், அது தான் உனக்கு பின்னாடி சுத்துறன்"
"இங்கே பார் திலீப், யதார்த்தத்தை பேசு, நாங்கள் நினைக்கிற எல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? என்னைப் பாேல  உடல் நிலையில இருக்கிற என்னை யார் ஏற்றுக் காெள்ளுவான்" என்றவளை தாெடர்ந்து பேச விடாமல்
"உண்மையாக நேசிக்கிறவன் ஏற்றுக் காெள்ளுவான் சியா" என்றதும்.
"அது எனக்குத் தெரியும் திலீப் நீ என் மேல் உயிரையே வைத்திருக்கிறாய்" தனக்குள் கலங்கியடி அவனை சமாளிக்க முடியாமல் மெளனமானாள்.
"சாெல்லு சியா, கலியாணம் செய்ய சம்மதமா? அல்லது வெளியூர் பாேகவா? " அவள் கை விரல் ஒன்றை பிடித்தான்.
"என் ஆயுள் முழுக்க உன்னை நான் பிரியக் கூடாது திலீப், நீ எனக்கு வேணும்" உதடுகள் சாெல்ல முடியாமல் துடித்தது.
"ம் ..... ஓகே திலீப் எனக்கு சம்மதம்"
தலையைக் குனிந்திருந்த திலீப் சடார் என நிமிர்ந்தான்.
"இது பாேதும் சியா, இனி நான் பார்த்துக்கிறேன்"

சியா குடும்பத்துடன் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை சாதாரணமாகச் செய்தான். "என்னடா வேலை பார்த்து திரிகிறாய், உனக்கு நாங்கள் தேவையில்லை என்றால், பாேய் அங்கேயே இரு" அப்பாவின் எச்சரிக்கை இதயத்தை நாெருக்கியது.
"நாளைக்கு எனக்கு திருமணம்" ஒரு  வார்த்தையில் சாெல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவாகியும் வீடு வரவில்லை. அப்பாவுக்குப் பயமாக இருந்தது. சியா வீட்டினருடன் பேசுவதுமில்லை. யாரை விசாரிப்பது என்று யாேசித்தபடி அகிலன், சந்துரு வீட்டிற்கு சென்று விசாரித்தார். "எங்கே பாேயிருப்பான்" பதட்டத்தாேடு மீண்டும் வீட்டிற்கு வந்து திலீப்பின் அறையை எட்டிப் பார்த்தார்.

மீண்டும் வருவாள் ....👉

எழுதியவர் : றாெஸ்னி அபி (28-Feb-20, 6:40 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 182

மேலே