அழகாக மாறிடவே

அமிழ்தமாம் மழைப்பொழிந்து ஆறெல்லாம் நீரோடி
அதிசய சிறுச்செடிகள் அத்தனையும் வேர்ப்பிடித்து
அகில உயிர்கள் காக்க அவையெல்லாம் மூலிகையாய்
அழகாக மாறிடவே ஆதியை தொழுதிடுவோம்.

எவ்வுணவு சாப்பிடிணும் எவ்வேலை செய்திடிணும்
எந்நேரம் உறங்கிடிணும் எவற்றையும் விலக்கிட்டாலும்
எந்தன் வசம் வராமலேயே எல்லாம் இருப்பதற்கு
என்னக் காரணமோ என்னைப் படைத்த இறைவனே.

பருவத்தில் வைத்த பயிர்கள் பலவாறு பயன்படவே
பருவகாலம் என்பது பல ஆண்டாய் தொடர்ந்து வர
பல கண்ட பயிர்களெல்லாம் ஓரிடத்தில் கிடைக்கையிலே
பல்வேறு இயற்கை சீற்றம் நிகழ நோக்கம் என்ன.

மனிதனின் மகத்துவத்தை மரணம் நிறைவு செய்யும்
மண்ணின் நற்குணத்தை பயிர்கள் வெளி கொணரும்
மனிதனில் இனப்பிரிவு மதிப்புயர்த்த பண மதிப்பென
மதியால் வரையறுத்தவன் அவனே பிதாமகன்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-20, 7:27 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே