நீதான் யமுனா

திருவிழா காலங்களில்
நீதான் மழைமேகம்
கனா களங்களில்
நீதான் அருவி ராகம்
நிழல் வேளையில்
நீதான் வெயில் தாகம்
தணல் நெஞ்சினில்
நீதான் உயிர் தாளம்
இணைபிரியாமல் கைகள் கோர்த்து
இளமாம்பிஞ்சின் வாசம் நுகர்ந்து
கரைகொள்ளா நதியாய் தொடர்ந்து
கன்ன கதுப்புகளின் குழியில் மலர்ந்த
தாழம்பூவாய் மணம் வீசுவதும் நீதான்
இமை மீது இரக்கமின்றி
நடனமாடுவதும் நடமாடுவதும் நீதான்
இளைப்பாற இன்னுமோர்
இடம் தேடுவதும் நீதான்
ஏற்றி வைத்த அகல் விளக்கின்
ஒளி தீபமாய் அறைமுழுவதும்
தேவியாய் சுடர்விடுவதும் நீதான்
காமங்களின் பிரதிபலிப்பாய்
நான் உன்னுள் நுழைகையில்
தெய்வீகமாய் சிரிப்பதும் நீதான்
தெய்வீகமாய் சிரிப்பதும் நீயேதான்
எல்லாம் இதற்குத்தானா என்ற
கேள்வியில் யமுனாதான் நீ....
மோகமுள் யமுனாவேதான் நீ.....
...................................................மேகலை...........