உன்னில் என்னை கண்டேன்
அன்பே
உன் கன்னத்தை மொழிப்பெயர்த்தேன்
அது பூஞ்சோலையானது
உன் கன்னக்குழியை
மொழிப்பெயர்த்தேன் அது
தங்கச்சுரங்கமானது
உன் விழிகளை மொழிப்பெயர்த்தேன்
அது கவிதையானது
இறுதியில் உன்னையே
மொழிப்பெயர்த்தேன்
அதில் என்னையே நான் கண்டேன்...