என் அழகி

பேரழகி !
நான் இதுவரை கண்ட பெண்களிலே ...
இவள் பேரழகி !
குரலழகி !
நான் இதுவரை கேட்ட‌ குரல்களிலே ..
இவள் குரலழகி !.
கண்ணழகி !
அவள் பார்கும் பார்வையில் யாவும்
இவள் கண்ணழகி !
பார்வையில் காந்தமோ ?
ஆரடி அங்கமோ ?
அவள் அழகால் கவிதை பொங்குமோ ?
தேவதை நகலோ ?
இல்லை தேவனின் மகளோ ?
பூக்களின் நிழலோ ?
இல்லை பூமியில் நடக்கும் பொன்மகளோ ?
அழகின் வழியோ ?
இல்லை அழகை ஆளும் அரசியோ ?
கம்பன் வரியோ ?
அவள் சிரிக்கும் அந்த சிரிப்பிலே !
சிற்பம் கூட அவளை ரசிக்குமே !
அவள் அழகில் பிரம்மனும் பித்தனே
அழகியே !
அழகியே !
நீ எந்தன் தமிழ் அழகியே!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (5-Mar-20, 11:13 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : en azhagi
பார்வை : 559

மேலே