மகளிர் தினம் வாழ்த்துக்கள் 💐💥 பெண்னே இந்த உலகம் உன் விரல் நுனியில் 💥

மகளிர் தினம் வாழ்த்துக்கள் 💐💥

பெண்னே இந்த உலகம்
உன் விரல் நுனியில் 💥


பெண்னே நீ நடந்து வந்த பாதைகள் முட் பாதைகளோ அல்லது ரத்தின கம்பளம் விரித்து பாதையோ
அது அல்ல முக்கியம் உன் குறிக்கோளை அடைய பல சோதனைகளை தாண்டி சாதனை செய்தாயே அதுவே சாலச்சிறந்த விஷயம். அவமானங்களும், அவமறியாதைதகளும், உன் பல கனவுகளுக்கு அஸ்திவாரமாய் அமைந்தது.
அன்று நீ வைராக்கியம் என்ற லட்சிய விதையை ஆழ் மனதில் விதைத்தாய் .
அதை இன்று மிகுந்த கர்வத்துடன் அறுவடை செய்கிறாய்.
அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட்டாய். வாழ்க்கையை போராடி வெற்றி பெறுவதில் தனி சுகம் தான்.
வெற்றி என்ற மூன்று எழுத்து மந்திரத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டாய்.
அது சூட்சுமம்மல்ல, சூத்திரமும் அல்ல, கடுமையான உழைப்பின் பலனே என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாய். இனி உன் அடுத்த இலக்கு எதுவாயினும் உனக்கு அது மிகவும் சுலபமே.
சிந்தனை செய்வதை நிறுத்தாதே.
புதியதோர் உலகை படைக்க உடனே புறப்படு,
பெண்னே இந்த உலகம் இனி உன் கரங்களில், அல்ல
அது உன் விரல் நுனியில். வெற்றி....வெற்றி.. அதுவே உன் நிரந்திர தாரக மந்திரமாக இருக்கட்டும்.

- பாலு

எழுதியவர் : பாலு (6-Mar-20, 2:13 pm)
சேர்த்தது : balu
பார்வை : 74

மேலே