முதியோர் இல்லமா-----------இஷான்

ஆறுமுகம் உன் வீட்டுல
குந்த பஞ்சு மெத்தை தேவையில்லயா...
உன் பக்கத்திலயே தென்னமர
ஓலை குடிசை ஒன்னு கட்டித்தாயா?

உன்னோட சொத்து சுகத்த எல்லாம்
நீயே பொத்தி வச்சுக்கயா...
அன்ப மட்டும் தாய்பால்
பசிக்கு கொஞ்சம் தாயா....

கொஞ்சோன்டு கஞ்சி
ஏன் வயித்திக்கு தந்தா போதும்யா
பேத்தியோட முகத்தயே பார்த்துகிட்டு
உனக்கு ஒத்தாசையா கிடப்பேன்யா...

வயசு மெல்ல மெல்ல பொடியாகுதய்யா
அறிவு ஆட்டம் காட்டுது...
மறதியும் மழையா பெய்யிது...
கண்ணு கூட துணையா கண்ணாடி தேடுது
நரம்பும் கறைஞ்சி ஓடுது...
ஏன் நிலமய சொல்ல கண்ணீரும்
வெக்கப்படுதய்யா....


சாந்தி சொன்னாயா
என்ன முதியோர் இல்லத்தில
நீ மூட்டகட்ட போறியாமே....

முதும போடுற முடிச்சால
அறியாம சில தப்பு செஞ்சிருப்பன்யா...
அதுக்காக என்ன நீ கண்ணில்லா காட்டுக்கு விட்டிடலாமாயா....

நேரத்துக்கு சாப்பாடு கிடைச்சும்
அங்க வயிறு நிறம்பாதய்யா...
சுத்தி வெளிச்ச பல்பு இருந்தும்
கண்ணு வெள்ள ஒளி கக்குமய்யா
பற்கள் மேனி திறக்காமலே
பல வருஷம் போயிடுமய்யா...
படுத்த படுக்கையோடயே
மனசு சேவல் கூவுமய்யா...
தனிம மட்டுமே என்ன
தத்தெடுத்து ஞானமா சிரிக்குமய்யா...
சேவை செய்யும் பொம்மைகள்
ஒரு நாளும் ஏன் உதிரமாகாதய்யா...

உன்னோடயே கிடந்து
கொஞ்ச நாள்ல இந்த கட்ட
உங்க அம்மாவோட போய்
சேர்ந்து நிம்மதிய வாழ்ந்திடும் ஐயா...(இஷான்)

எழுதியவர் : இஷான் (7-Mar-20, 9:36 pm)
பார்வை : 103

மேலே