அரக்கன்
ஆசைகள் ஆயிரம் கொண்டாலும் ஆயுள் முழுதும் வாழ ஆண்டவனை மிஞ்சிய அரக்கனின் துணை தேவை..அவனுக்கு உயிரில்லை..ஆனால் ..
அவனால் உயிர்பெறுகிறோம்..தேவை தீர தேடுகிறோம்..அனுதினமும்..அந்த அரக்கனை..விண் மண் நீர் காற்று நெருப்பென பஞ்ச பூதங்களையும் கூட அவனை கொண்டே பெற முடிகிறது..அவன் துணையின்றி அடி நகர்ந்து செல்வதோ கடினம்..மனித உருவமில்லை..மனம் அவனுக்கில்லை..தேவைகள் ஏதும் அவனுக்கில்லை..தேட வைப்பதில் அவனை போன்ற வித்தை காரனும் இல்லை..காதலனும் இல்லை..அவனில்லையென்றால் அகிலமில்லையென்றே வசைபாடவைப்பான்..காகிதமே அவன் உருவம்..காற்றில் கூட பறப்பான்..இருந்தும் அவன் கைதி தான்..நம்மிடத்தில்..நம் கை விட்டு அவனால் செல்ல இயலாது..யாரென்று புரியவில்லையா?..அவன் தான் பணம்..💰💵💴💵