மகளிர் தினம்
பெண் என்பவள்
பரிசுத்தத்தில் அவள் நீர்
களங்கமற்றது
பொறுமையில் அவள் நிலம்
அகழ்வாரையும் தாங்கிக்கொள்ளும்
கற்பில் அவள் தீ
தீயை ஈ மொய்ப்பதில்லை
சேவை மனப்பான்மையில்
அவள் காற்று
எங்கும் நிறைந்திருக்கும்
பாசம் காட்டுவதில்
அவள் ஆகாயம்
எல்லையற்றது....
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..