இயற்கை அழகே

இயற்கை அழகை
கூறுவதற்க் கா
வார்த்தைகள்
இல்லை !....

பறவைகளின்
வார்த்தைகள்
இன்றி ..
இசைக்கும் குரல்
அழகு ;

கடற்கரையில்
நுரை பொங்க
வந்து செல்லும்
கடல் அலைகள்
அழகு ;

ஒளிச் சுடராய்
தீபத்தில் எரியும்
ஒளியும் தான்
அழகு ;

மழை மேகம்
கூடி வரும்
மேகக் கூட்டம்
அழகு ;

கண்ணை
பறிக்கும்
கொடி மின்னல்
அழகு ;

ஒவ்வொரு
இரவிலும்
நிலவோடு
கதை பேசும்
நேரமுமே
அழகுதான் !....

வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவருக்கு அனைத்திலும் அழகு காண்பர்.

எழுதியவர் : Veenu (9-Mar-20, 11:48 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : iyarkai azhage
பார்வை : 351

மேலே