உலகந்தோறும்
ஆடும் மாடும் அதிவேக குதிரையும்
சிங்கம் சிறுத்தை சிலாகிக்கும் குரங்கு
குருவி குயிலு குலை நடுங்கக் கூவும் கோட்டான்
தும்பி வண்டு தொலைவில் பறக்கும் பூச்சி
யாவும் மனிதன் போல் சாயம் பூசி
உலகம் தோறும் வலம் வந்து சென்றால்
வம்சத்தை பிரிப்பது இம்சையாகும்
தன்னிலை மாறி தவறு நேருங்கால்
உன்னதம் இழந்து உருக்குலைவு ஆகும்
எந்நிலைக்கும் இவையே பொதுவாம்
இல்லோகத்து அறிவினரே உணருங்கள்.
----- நன்னாடன்.