அன்பு தானே ஊற்றெடுக்கும் எல்லை இதோ

அதிசயம் நிகழ்ந்தது
புது அதிசயம் நிகழ்ந்தது
சாதி ஒழிந்தது
புது சமத்துவம்‌ பிறந்தது
அன்பு மலர்ந்து
புது அர்த்தம் துங்கியது
புரியாத காதல்
புரிந்து கொண்டது
அறியா நட்பு
அறிய முயன்றது
மதங்கள் ஒன்றையொன்று
பிண்ணிக் கொண்டது
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற
எண்ணம் ஒழிந்தது
வேதம் மறைந்து
புது நேசம் பிறந்தது
யாவும் தொடங்கையிலே
புவி ஏனோ தன்னை பிளந்து கொண்டது
அதனுள் எண்னற்ற உயிர்கள் மடிந்து கிடந்தது

எழுதியவர் : (10-Mar-20, 8:43 pm)
சேர்த்தது : Pradeep
பார்வை : 64

மேலே