உவமை இல்லா அவள்

பூக்கள் என்று‌ வர்ணித்தால்
பொய்யாகிவிடும்
பூக்களும் ஒரு நாள் வாடும்
முழு மதி என்று வர்ணித்தால் பிழையாகிவிடும்
மதியும் ஒரு நாள் தேயும்
ஓடும் நதி என்று வர்ணித்தால்
ஒவ்வாமையாகிவிடும்
நதியும் ஒரு நாள் வறண்டு விடும்
மின்னும் நட்சத்திரம் என்று வர்ணித்தால்
மிகைமையாகிவிடும்
நட்டசத்திரமும் ஒருநாள் எரி கல்லாகிவிடும்
உன்னை வர்ணிக்க நிகரானவள் நீயே
உனக்கு இல்லை உவமையே இந்த உலகிலே

எழுதியவர் : (10-Mar-20, 8:40 pm)
சேர்த்தது : Pradeep
Tanglish : uvamai illaa aval
பார்வை : 190

மேலே