என்றும் நீயே எதிலும் நீயே
காதில் இனிக்கும் இசைகளுக்கு ஆயிரம் அர்த்தம்
தனி தனி பிரித்தால் உன் பெயர் சொல்லும் நித்தம்
அசரா காலங்கள் காற்றாய்
பறக்கும்
அதில் ஒவ்வொரு நொடியின் பின்னங்களிலும்
என் மனம் உன்னை நினைக்கும்
ஒளிக்கு தான் தான் வேகம் என்ற கர்வம்
உன்னை அடையும் என் நினைவோ அதனிலும் அதிகம்
நிகழ்வுக்குள் நிழலாய்
நிழழுக்குள் நிகழ்வாய்
என்றும் திரிவோம்
எதிலும் திரிவோம்