கடந்த பாதை

கடந்த பாதை
காற்றில் உதிர்ந்த விதை
வெற்றி எனின்
துளிர்த்து எழும்
தூக்கிக் கொஞ்சலாம்
தோல்வி எனின்
மக்கி போகும்
மண் செழிக்கும்
செழித்த மண்ணில்
புது விதை நட்டு
புதிதாய் வளரலாம்

எழுதியவர் : (10-Mar-20, 8:36 pm)
சேர்த்தது : Pradeep
Tanglish : kadantha paathai
பார்வை : 96

மேலே