புது மனிதன்
மனிதா பிறந்து வா!
நீ மீண்டும் பிறந்து வா!
வளர்தெடுக்க வா!
மனிதம் வளர்த்தெடுக்க வா!
பிறப்பினால் பிரிந்த நீ பகுத்தறிவினால் சேர வா!
திட்டம் போட்டு பிரிப்பவனை
திடமாய் நின்று எதிர்க்க வா!
உன்னை சுற்றும் தீமையினை
உன் அறிவுத் தீ கொண்டு கொளுத்த வா!
நிற்காமல் ஒடும் காலத்தில்
நிலையாய் உன் பெயர் பதிக்க வா!
பிரிவினை விற்கும் சந்தையை அழித்து
சகோதரத்துவம் பரப்ப வா!
நாம் யாவும் இங்கு ஒன்றே
என்று உரக்கச் சொல்ல
புது உயிரெடுத்து வா!
பிறந்து வா புது மனிதா!