தேவதை வந்தாள்
வான் இறங்கி வந்தவளோ
வெள்ளாவியில் வெளுத்தவளோ இல்லை
ஆனால் தேவதையின் அர்த்தம் அவளே
என் நெஞ்சிறங்கி வந்தவளும் அவளே
ஆயிரம் காதல்கள் இங்கு உண்டு
ஒராயிரம் கவிதைகளும் இங்கு உண்டு
ஆயினும் அவள் காதல் ஏனோ புதுகவிதை
அது என் செவியெங்கும் பரப்பும் செந்தமிழை
வானம் தன் குணத்தை மேகமாய் காட்டும்
மேகம் கசிந்தால் வானம் வாடும்
அவளோ தன் குணத்தை தன் விழிகளால் காட்டுவாள்
அவள் கசிந்தால் என் மனம் வாடும்
வார்த்தை ஒன்றும் தோன்றவில்லை
வாழ்த்து கூறவும் வாய் வரவில்லை
பாவை அவள் என் வாழ்வில் மறுபக்கம்
நின் பாதம் நான் ஏந்த பெற்றது எனக்கு பெரு வரம்
உன்னைநொடி நொடியாய் காதலிப்பேன்
நேரம் தீர்ந்தால் சூரியனை முழு நேர வேலைக்கு வர ஆணையிடுவேன்!
தேவதை அவள் வந்தாளே!