அழகு இல்லை அவள் ஆனாலும்

அழகு இல்லை அவள் ஆனாலும் ஓர் ஈர்ப்பு
அதிகாலை பிறந்துவிட்டால் அப்படி ஒரு குறுகுறுப்பு
அவளைப் பார்ப்பதற்கு அவள் வீட்டுக்கு படையெடுப்பு
அர்த்தமில்லா வார்த்தையால் அவளிடம் விசாரிப்பு
நித்தமும் இதுவே தான் நீண்டதாய் தொடர்ந்திட
பித்தமாய் காதல் என்னை பெரும்பாடு படுத்திட
சுற்றமும் மறந்தது சுவை உணவும் குறைந்தது
காதல் நோய் வந்து கண்டபடி உடல் இளைத்தது
என்ன சொல்வாளோ என் காதலை சொல்லிய பின்பு
ஏடாகூடமாய் சொல்லிவிட்டால் என்ன செய்வது
என்று மனதிற்குள்ளே ஏகப்பட்ட பிரளயத்துடன்
எண் சாண் உடம்போ ஏக்கமுடன் இருந்தது
வந்த துணிவைக் கொண்டு அவளை வழிமறித்து நின்று
வாய்க்குழறிய நிலையில் வசந்த காதலை சொல்ல
வாழ்த்திய நிலையில் அவள் பலமாக தலையை ஆட்ட
வானத்தில் பறந்தவாறே வலம் வருகிறேன் இன்றுவரை .
----- நன்னாடன்