உன் நினைவில் நான்---பாடல்---

மெட்டு : ஆனந்த யாழை மீட்டுகிறாய்
பல்லவி :
பூவென்ற தேகம் தீண்டுகிறாய்
உயிர் கொஞ்சும் மோகம் தூண்டுகிறாய்...
நெஞ்சினில் ஒளியை ஏற்றுகிறாய்
அதில் காதலின் அமுதினை ஊற்றுகிறாய்...
இளம் தென்றல் உரசும் பூக்களின் இதழ்கள்
புன்னகை அரும்பும் நாணம் கொண்டு...
கருவண்டு இசைக்கும் இனிய இசையில்
மயங்கி அசையும் பூவுமன்று...
இந்த வண்ணக் கனவில் வாழும் நொடி
மனச்சோலை எங்கும் இன்பம் பூக்கிறது...
அந்தக் கண்ணன் குழலின் கீதமொன்று
சொர்க்க மாயம் தந்து என்னுள் பாய்கிறது...
சரணம் 1 :
வானத்து நிலவில் நாம் பிறந்து
வீணையின் உடலாய் நீயிருக்க
மீட்டிடும் நரம்பாய் நானிருக்க
தோன்றிடும் பாடல் தேன் தெளிக்கும்...
இதை நாளும் நினைத்து உள்ளுக்குள் புதைத்து
மனசு நெல்லெனக் காய்கிறது...
அந்தக் கண்ணன் குழலின் கீதமொன்று
சொர்க்க மாயம் தந்து என்னுள் பாய்கிது...
சரணம் 2 :
வீட்டினில் உன்னை நான் வரைந்து
பார்க்கின்ற நொடிகள் மெய்மறந்து
நீரென்று உனையே நான் பருக
கண்களின் தாகம் தீர்கிறது...
புது ஆசை விதைத்துப் பூமியைத் தொலைத்துக்
கற்பனை உலகில் வாழ்கிறது...
அந்தக் கண்ணன் குழலின் கீதமொன்று
சொர்க்க மாயம் தந்து என்னுள் பாய்கிறது...
(16/12/2018)
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..