கன்னத்தை இறுக்கி

கன்னத்தை இறுக்கிப் பற்றி
காதோரம் முத்தமிட்டு
காந்தம் போல் ஒட்டிக் கொண்டு
காதல் போதையில் மயங்க வேண்டும்
கண்ணாடி பதித்ததைப் போல்
காணமெங்கும் உன் உருவம் வேண்டும்
கலையான உன் முகத்தை
கச்சிதமாய் இதயத்தில் செதுக்க வேண்டும்
என் நாவினால் உன் உதட்டை சீண்டிவிட்டு
நவ துவாரங்களால் சிலிர்ப்படைந்து
நகக்கீரல்களை உன் உடலிலிட்டு
நினைத்து நினைத்து மகிழ வேண்டும்
உன் வாசத்தை பூசிக் கொண்டு
உலகத்தின் சூழல் மறந்து
உலா வரும் காற்றைப் போலே
உள்ளன்போடு உன்னுடன் வாழ வேண்டும்.
----- நன்னாடன்