கிராமத்து காதல்

ஒத்தையடி பாதையில -நீ
நடந்து போகையில
ஒத்த மரம் பக்கத்துல -நான்
ஒத்தையில நின்றதென....

குளத்து கரையில -நீ
குடம் வைத்து தூக்கையில
தளும்பும் தண்ணிபோல -என்
மனசு ஆனதென்ன...

சிக்கெடுத்து தலைவாரி -நீ
சீவையில பூமயிலே
என் உசுரு சிக்கிக்கிட்டு
மனம் பித்துக்கொண்டு போனதென்ன...........

கண்ணாடி வளையலை -நீ
கைக்குள்ள நுழைக்கையில
கையை கிழிச்சுடுமோ -நான்
கை நடுங்கி போனதென்ன.....

அந்த காலம் கடந்து போச்சுதடி
நினைக்கயில
கண்ணீர் வந்து கன்னத்தை நனைக்குதடி..................

எழுதியவர் : Karikayal (11-Mar-20, 1:18 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 149

மேலே