அவள்
பெண்ணின் அழகைப் பற்றியே
என் கவிதைகளாய் நான்
எழுதுவதேன் என்று இவர்கள் …..
இவர்களுக்கு தெரியாது நான்
அன்றொரு நாள் ஒரே முறைப்
பார்த்த அந்த பேரழகி என் மனதை
விட்டு அகலாமல் இருக்க
எப்படியாவது நான் எழுதும்
இந்த கவிதை வரிகளை அவள்
படிக்கமாட்டாளோ அது அவள்
மனதின் கதவைத் திறந்து எனக்கு
அங்கோர் இடம் எனக்கு மட்டுமே
தந்திடாதோ என்று …… இன்னும்
எழுதி கொண்டிருக்கின்றேன் நான்
எழுத்துக்கு ஏது வயது ……. அது
இன்னும் அதே இளமையில் …
என் மனதில் அவளும் அதே இளமையில்
என் கவிதையும் அவள் மனமும்
சந்திப்பதுதான் எப்போதோ ….