அடடா விவசாயம் அதிசய விவசாயம்

களையை பிடுங்க வேண்டுமென்றால்
கழனி சேறாய் இருக்க வேண்டும்
களையை கொத்த வேண்டுமென்றால்
கழனி புழுதியாய் இருக்க வேண்டும்
வெட்டி அறுவடை செய்தல் என்றால்
விளைச்சல் கழி போல் இருக்க வேண்டும்
அறுத்து விளைச்சல் செய்தல் என்றால்
விளைந்தது மிருதுவாய் இருத்தல் வேண்டும்
பிடுங்கி விளைச்சல் செய்தல் என்றால்
பிடிக்கி நெளிவாய் விளைச்சல் வேண்டும்
உலுக்கி விளைச்சல் செய்தல் என்றால்
உயரத்தில் விளைந்தது இருத்தல் வேண்டும்
கொய்து விளைச்சல் செய்தல் என்றால்
கொத்தாய் விளைச்சல் இருத்தல் வேண்டும்
தோண்டி விளைச்சல் செய்தல் என்றால்
மண்ணுள் விளைந்தது இருக்க வேண்டும்
எடுத்து விளைச்சல் செய்தல் என்றால்
வெடித்து விளைந்தது இருக்க வேண்டும்
உரித்து விளைச்சல் செய்தல் என்றால்
உருவானது உள்ளுக்குள் இருத்தல் வேண்டும்
விளைவிக்க பல முறை உள்ளதைய்யா
விலைவைக்க விளைவித்தவனால் முடியாததே
வேதனை நிகழ்வாய் இருப்பதற்கு
விடை சொல்ல யாரேனும் வருவாரோ?
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Mar-20, 8:04 pm)
பார்வை : 1861

மேலே