பெண்ணே நீ எங்கே
பெண்ணே நீ எங்கே?
உன்னை காணவில்லையே?
எங்கே தொலைந்தாய்?
அடையாளம் சொல்லவா
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
நேர்த்தியான உடை
இதழில் புன்னகை
தெளிந்த சிந்தனை
முடிவில் தீர்க்கம்
பேச்சில் நிதானம்
எதிலும் வெற்றி
உன்னை காணவில்லையே?
எங்கே தொலைந்தாய்?
திருமணம் எனும் திருவிழாவில்
தொலைந்து போனாயோ? --இப்போ
அழுக்கு துணியுடன்
அடுப்பங்கரையில் புகைந்து
விறகோடு எரிந்து கொண்டு இருக்கிறாயோ.......
விலாசமின்றி.......