நீ தந்த முதல் முத்தம்
நம் காதல் பயணத்தில்
நீ அளித்த எத்தனையோ பரிசுகளில்
இந்த முதுமையிலும் எனக்கு நீங்கா
இன்பம் தருவது என்
கன்னத்தில் நீ இட்ட முதல் முத்தம்
அது என் நினைவு ……. நெஞ்சில்
இளமைக்குன்றாது பரவி இருப்பதை
உணர்கின்றேன் நான் இன்றும்
காலம் தீண்டா பரிசல்லவோ அது
நீ தந்த வலிகள் அத்தனையும்
மாயமாய் மறைந்தோடுதே இந்த
மாய பரிசை நினைத்தாலே…..
வலியை மறைக்கும்' பங்கஜ கஸ்துரி தைலம் போல