கடவுளின் வருகையும் நோய்க்கான மருந்தும்

ஏன் இந்த மயான அமைதி என்றார் கடவுள்...?

யாரும் மயானத்திற்கு செல்லக்கூடாது என்பதால் - என்றான் மனிதன்

ஏன் தனிமைப்படுத்துதல் நிலை -
இந்த நிலை இந்தியாவில் மட்டுமா...?
இல்லை வெளிநாடுகளிலுமா என்று கேட்டார் கடவுள்...

இந்த நிலை உலகம் முழுவதும்தான் - தனிமைப்படுத்துதலை எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து வலியுறுத்தி பின்பற்றி வருகின்றோம் - என்றான் மனிதன்.

தனிமைப்படுத்துதலுக்காக ஒருங்கிணையும் நீங்கள் - நாளை ஒன்றுபட்டு வாழவும் ஒருங்கிணையுங்கள் என்றாா் கடவுள் -

அது இருக்கட்டும் கடவுளே...
நோய்க்கு நீங்கள் மருந்து கொடுங்கள் என்றான் மனிதன்

தருகிறேன்.
ஆனால் - உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து எனக்கு ஒரு கையொப்பமிட்டு தர வேண்டுமென்றார் கடவுள்...

எதற்காக....? என்றான் மனிதன்

நாங்கள் இனிமேல் ஒற்றுமையாக இருப்போம் என்றுக்கூறி கையொப்பம் இட வேண்டும் என்றார் கடவுள்.

சரி...
நான் அனைவரையும் அழைத்து வருகிறேன் என்றான் மனிதன்

பின் ஒப்பந்தபடி
உலக நாடுகளின் தலைவர்கள் விமானத்தில் வந்து கொண்டிருந்தார்கள் -

அப்படி வந்த சமயத்தில்...

தீடீரென்று விமானத்தை காணவில்லை

இந்த தகவல் கடவுளுக்கு சென்றது...

கடவுள் விமானத்தை தேட ஆரம்பித்தார்...

கடைசியில் விமானம் ஒரு மலைப்பகுதியில் குகைக்கு அருகில் இருந்தது...

கடவுள் குகைக்குள் சென்றார்...

அங்கே தலைவர்கள் நலமாக இருந்தார்கள்...
அவசர நிலையாதலால் -
மருந்துக்கான மூலப்பொருட்களையும் அங்கேயே காண்பித்தார் கடவுள்.
பின் கையெழுத்து உடன்படிக்கையும் அங்கேயே நடைபெற்றது...

பின் ஒவ்வொரு தலைவர்களும் குகையை விட்டு வெளியே வந்தார்கள்...

ஆனால்...

கடவுளை மட்டும் உள்ளேயே வைத்து மூடிவிட்டார்கள்...

மனிதர்கள் இப்படித்தான் - தன் மனமாகிய குகைக்குள் சமத்துவம் நிறைந்த கடவுளையும் - கடவுள் தன்மையும் மூடி வைத்துவிடுகிறார்கள்...

அதனால்தான் அவர் -
இயற்கையை கொண்டே -
இயற்கைக்கு எதிர்மறையாய் வாழும் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறார்...

அவர் அடிக்கடி நினைவூட்டியும் வருகின்றார்...
ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளாதீர்கள் என்றும்....

அனைவரும் ஒன்றுபட்டு -
தூய்மையை மனதாலும் - உடலாலும் பின்பற்றி வாழுங்கள் என்றும் -

ஆனால் நாங்கள் இப்படித்தான் அடித்துக் கொள்வோம் என்று மனிதன் அடம்பிடிக்கின்றான் -

மீண்டும் - கடவுள் அவதரிக்கின்றார் இயற்கையின் வடிவில் -

திருப்பி அடிக்க ஆரம்பமாகின்றார் - அந்த அடியின் ஆரம்பம் நமக்கு ஒற்றுமையையும் அன்பையும் ஆழமாக போதிக்கின்றது வலியின் தருணத்தில்...!!!

( ஒருங்கிணைந்த நல்ல எண்ணங்கள் - என் அடையாளம் மட்டுமல்ல - நமது அனைவரின் அடையாளமும் )

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (22-Mar-20, 5:20 pm)
பார்வை : 167

மேலே