என் காதல் மடல்

" என் சிறு இதயத்துள்ளும்
இப்பெரும் உணர்வுகள்
உறைந்திருப்பதை உணர்த்திய
என்னவளே !

இப்பொழுதும் எப்பொழுதும்
என் வாழ்க்கைப் பயணத்தை
உன்னுடன் தொடரச்சொல்லும்
என் இதயத்தின் விண்ணப்பத்தை
ஏற்று என்னுடன் வருவாயா ? "

எனக் கேட்டு வரச் சொல்லி

நிலவின் அழகில் மயங்கி
கதிரவன் மேற்கில் விழும்
இனிய மாலை வேலையில்
என் தேகம் தீண்டிய
தென்றலை அனுப்பிவைத்தேன்
அது உன் மூச்சுக்காற்றாகும்
ஆசையில் கேட்க மறந்தது...

தாமரைகள் நிறைந்த தடாகத்தில்
உள்ள மீன்களைப் போன்ற
கண்களை உடையவளே !
உன் கூந்தலின் நிறமொத்த
கருமேகங்களை அனுப்பிவைத்தேன்
உன்னைத் தொடும் ஆவலில்
கரைந்துவிட்டது
மழைத்துளியாக...

பௌர்ணமி நிலவனுப்பினேன்
உன் அழகின் பொறாமையில்
அமாவாசையாகிப்போனது...

மனம் கவரும்
மலர்களையனுப்பினேன்
உன் மனம் கவருமென்று
அதன் மனம் கவர்ந்தாய்போலும்
பற்றிக்கொண்டது உன்கூந்தலை...

மனத்தின் ஆழ்ந்த உணர்வினையும்
வெளிக்கொணரும் இன்னிசையனுப்பினேன்
என் அன்பே
உன் குரலிசையில்
நிசப்தமாகிப்போனது...

இறுதியாக
திரும்ப வராதென்று தெரிந்தும்
என் மனம் அனுப்புகிறேன்
பத்திரமாய் பார்த்துக்கொள்
பதில் கூறிவிட்டு
என் காதல் மொழியாகிய
கனிமொழியே..!

எழுதியவர் : GDK (23-Mar-20, 7:48 pm)
சேர்த்தது : GDK
Tanglish : en kaadhal madal
பார்வை : 213

மேலே