காதல் வலி 80
நீ
வசந்தா
உன் இதயத்தை
என் வசம் தா
நீ
மணிமேகலை
உன் மேனி
பிரம்மன் செய்த கலை
மெளனம் இனியாவது களை
வயது ஆக ஆக
அனைவரும் பாட்டியாக
நீ மட்டும் பியூட்டி ஆகிறாய்
உன் பிறப்பால்
புதுச்சேரி ஆனது
புது செர்ரி
நீ
டயானா
உன் ஊரில் மட்டும்
வருவதில்லை கொரானா
ஏனென்றால்
உன் ஊருக்குள்
வரும் வைரஸ் எல்லாம்
உன் கழுத்தில்
வைரமாய் தொங்குதடி
நீ
கீதா
என் இதயம்
தினமும் துடிக்க
காதலெனும்
கீ தா
நீ ஊர்வசி
என்னை மணந்து
என் ஊரில் வசி
நீ கவிதா
என்னை காதலிக்கிறேன்
என்று ஒரு
கவி தா

