இன்றைய தேவை

கத்தி இன்றி இரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று நடக்குது !
சத்தியத்தை நம்புவோர்க்கு
நித்தம் ஜெயமே !
வாளுக்கு வேலை இல்லை
வீண் பேச்சும் தேவையில்லை !
கூடி பேசிடும் வேளை இது அல்ல !
அறிவொளிக்கும் அற வழிக்குமே
நல்லதோர் வேளை ;
தனித்திரு !
கவனித்திரு !!
தவத்தோடிரு !!!
ஜெய் ஹிந்த்!

எழுதியவர் : (24-Mar-20, 1:12 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : indraiya thevai
பார்வை : 63

மேலே