அந்த இவள்

இலங்கேஸ்வரன் இராவணனுக்கு
ஈரைந்து சிரங்களென்பர்
இது எப்படி சாத்தியம் என்று
எண்ணியே குழப்பி நின்றேன் நான்
சின்னஞ்சிறு வயதில் அன்னை
மடியில் இராவணன் கதையை
என் தாய் சொல்ல கேட்டு...

இப்போது புரிகிறது எனக்கு
இது சாத்தியமே என்பது
ஆம் ஒரு முகத்தில் புன்முறுவல்
அன்பு ததும்ப இதழோரம் காதல் சிந்த
பார்க்கையிலே இன்னோர் முகம்
காட்டுகிறாள் நெஞ்சம் கலங்க
நஞ்சு கலந்த வஞ்சகப் பார்வையில்
இதழோரம் நஞ்சு சிந்த ........
இவளை காதலியென்று நினைத்து
ஏமாந்தேன் நான் ......
இவளென்ன கலியுக சூர்ப்பனைக்காயா
இன்னும் எத்தனை முகமோ இவளுக்கு
கள்ள மனத்தால் இவள் .......
இளங் காளையரை ஏமாற்ற

முகங்கள் பத்து என்று இராவணனுக்கு சொல்லியது
அசுரன் அவனுள் இருந்த குணங்கள் பத்து
அது படமெடுத்து ஆடியது நஞ்சைக் கக்க
அதுவே ராமாயண காவியம்

காதலி வேடத்தில் என்னை ஏமாற்றிய
இவள்....... இராவணேஸ்வரி தானோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Mar-20, 1:52 pm)
Tanglish : antha ival
பார்வை : 75

மேலே