புலர்ந்தும் புலராப் பொழுதினிலே
புலர்ந்தும் புலராப் பொழுதினிலே
புலன்கள் நடுக்கும் குளிர்சுமந்து
உலகம் விழிக்கும் முன்பாக
உழவ னோடு மேய்ச்சலுக்குத்
தொலைவாய்ச் செல்லும் மாடுகளே!
சுற்றி உண்டு பசியாறி
நலமாய் அந்தி மாலைக்குள்
நடந்தே பட்டி அடைவீரே !!
நெளிந்து செல்லும் பாதையிலே
நெகிழி கண்டால் உண்ணாதீர் !
களைப்பில் அமர்ந்து விடுவீரேல்
கடுமை யாகப் பசியெடுக்கும் !
வளைத்துப் புல்லைத் தின்றிடுவீர்
மகிழ்ச்சி யோடு திரும்பிடுவீர்!
அளிப்பீர் பாலைக் கன்றுகட்கே
அதன்பின் எமக்கு மன்புடனே! !