தேவதை

தோட்டத்தில் பூக்கும் பூக்கள்
என்னவளை காண என்முன்
மாநாடு நடத்தும்

வானில் படர்ந்த மேகங்கள்
என்னவளை காண என்முன்
உண்ணாவிரதம் இருக்கும்!

விண்மீன் கூட்டங்கள்
என்னவளை காண என்முன்
கண்சிமிட்ட மறுக்கும்

அழகிய வெண்ணிற நிலா
என்னவளை காண என்முன்
ஒளிர துடிக்கும்

இத்தகைய அழகை ஒட்டி கொண்டு பனியை கிழித்து ஏறிந்து
வருகிறாள் என் தேவதை!

எழுதியவர் : ப. தவச்செல்வன் (28-Mar-20, 2:40 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : thevathai
பார்வை : 615

மேலே