22 அடிமுடி எவர்க்கும் அறியொணான் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 6

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இதயந்தன் வேகத் தோடும்
..எண்ணிலவ் வியத்த காலம்
கதமொடு மீச்சென் றாலுங்
..கடவுண்மெய்ந் நடுவை யன்றி
இதரவங் கத்தைக் காணா(து)
..எனின்முடி யெவண்பொன் னொக்கும்
பதமெவ ணகண்டா காரப்
..பராபரற் குரையீர் பாரீர். 6

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனம் தன் முழு வேகத்தோடும், எண்களால் அளவிடப்படாதபடி காலமெல்லாம் வேகமாக ஓடினாலும் தெய்வத் திருவுருவின் நடுப்பகுதியை அல்லாமல் மற்ற உடல் பாகங்களைப் காணமுடியாது. அப்படியிருக்க, அவனின் முடியை, பொன் போன்ற பாதங்களை எப்படிக் காணமுடியம் என்று அளவிலா வடிவம் ஆன இறைவனிடம் சொல்லுங்கள் உலகத்தோரே” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அவ்வியம் - பேரெண். கதம் – வேகம், அண்டாகாரம் - அளவிலா வடிவம்.
பராபரன் – இறைவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-20, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே