வாழ்க்கையின் மிச்சம் 🤦‍♀️

வாழ்க்கை பட்டு வந்தேன் -என்
வாழ்க்கை பட்டு போச்சு..
அவமான பட்டு நின்னு -என்
மனசு விட்டு போச்சு....

கனவுல கூட அழுது -என்
கண்ணீரும் வத்தி போச்சு
கடவுளை வேண்டி என்ன -என்
காலம் கடந்து போச்சு....

உன்னோடு என்ன பேச்சு -என்
உசுரே விட்டு போச்சு
கண்ணோடு வந்து -என்
கன்னத்தை தொட்ட கண்ணீரும்
இன்று காணாமல் போச்சு..

நெஞ்சு பொறுக்குதில்லையே -என் நிலையை கண்டு....
கண்ண மறைக்குதடி கண்ணீர் வந்து.....

காயம்பட்டு துடிக்கிறேனே..
தனியே நின்னு...
காலம் மாறினால் காயம் மாறுமோ?

என் காலமெல்லாம் ஓடிப்போச்சு....
காயம் மட்டும் மாறலடி....

நிகழ்காலம் இது நெருப்பாய் எரியுது.
எதிர்காலம் அது இருட்டாய்
தெரியுது...

எழுதியவர் : Karikayal (28-Mar-20, 6:04 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : vaazhkkai
பார்வை : 661

மேலே