🙏 கன்டேன் எம் ஹரியும் ஹரனையும்🙏
💐செங்கமலம் மலரினை
திரு முடியினில் சூடி
வென் பன்னீரில் தோய்தெடுத்த
சந்தனத்தில்
அலங்கார காப்பு கட்டி ...
அதி ரூப சுந்தரனும்...
மீன்விழியால் மீனாட்சியும்...
ரிஷபத்தில் ஒருபுரமும்...
காதலின் இறைவி திருத்
துளசியினை....!!!
மாலையெனச் சூடி...🍃
எழில்பொங்கும்...
புன்முறுவலுடன்...
ஸ்ரீதேவி, பூதேவி
சமேதனாய்....
நீலப்பட்டாடையும்,
மணி மகுடமும் தரித்த
வேங்கடவன்
மறுப்புரமும்...
செவியினுள்ளே
தேனாறாய் பாயும்....
கோவிந்த கோஷத்திலும்,
நம சிவாய நாமத்திலும்..
மஹா ப்ரதோஷ நன்னாளில்
எம் ஹரியும், ஹரனையும்..
புறக் கண்களால் கண்டு...
🙏சங்கரநாராயணனாய்🙏
அக கண்களில் உணர்ந்த
காட்சியை என்னென்று
சொல்வேனோ........
🌟லீலா லோகிசௌமி🌟