நிகழ்ச்சிகள் ஏராளம்

சித்திகளோடு
ஒட்டிக்கொண்ட
மெட்டி ஒலிகள்,
காலம் போல
கரைந்துபோன
கோலங்கள் என
வரிசையாக
சின்னத்திரையின்
சீரியல்கள்,
மீண்டும் ஒரு
மெகா சீரியல்
ஆரம்பம் அந்தமானில்
“சுனாமி “
நித்தம், நித்தம்
ஆட்ட பாட்டங்கள்,
வாழ்க்கை போராட்டங்கள்
கதையின் கரு,
இந்த சீரியலும் கண்ணீரை
சிந்தவைக்கும்
சிந்தையை கலங்கவைக்கும்
நிகழ்ச்சிகள் ஏராளம்

எழுதியவர் : (29-Mar-20, 7:00 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 39

மேலே