என்னவளே
சந்திரனின் பிரகாசம் சற்றே குறையும்
விந்தை என்னவென்று யோசித்தேன்
சிந்தையில் உதித்தது பார்த்தேன்
இந்திர குலமகள் நீ எதிரே வந்ததாலா?!
புவியிலும் காந்தத்திலும் மட்டுமே
ஈர்ப்பு விசை உள்ளது என்று
எண்ணிய எனக்கு
இல்லையடா
என் கண்களிலும் உள்ளது பார்
என்று உணர்த்தியவள்
கண்ணில் கலந்து
என்னில் பாதியானவள்
இருக்கும் வரைஅல்ல கண்ணே
இறக்கும் வரை நேசிபேன் உன்னை!
குரும்பு செய்வது உன் வழக்கம்
அதை விரும்புவதே என் பழக்கம்
என்னால் உன்னிடம் மறைக்க முடிந்தாலும்
என்றும் உன்னை மறக்க முடியாதடி கண்ணே!!!