அன்பே
ஓயாமல் சிந்திப்பதால்
உன் நினைவுகள்
அழகாகிக்கொண்டே உள்ளன..
உன்போல்
எதிர்படும் யாரும் இல்லையென்றாலும்
சில பெண்களில் உனைக்காண்கிறேன்.
உனது அடையாளங்களை எனக்கு
காட்டிக்கொண்டே இருக்க
நீ அனுப்பிய
தூதர்கள் அவர்களென
எண்ணிக்கொள்வதுண்டு..
நீ அனுப்பாத அஞ்சல்களை
தினமும் எதிர்பார்க்கிறேன்..
விடியலுக்குக்காத்திருக்கும்
இருளாய் நான்..
விடியலே வா..
Rafiq