அழகிய பெண்னே🌹
அழகிய பெண்னே🌹
நான் அவனை காதலிக்கிறேன்.
காதலிக்க தொடங்கி விட்டேன்.
என் விருப்பத்தை அவனிடம் சொல்லவில்லை.
நான் போகும் இடமெல்லாம் என்னை அவன் நிழல் போல் தொடருவது
எனக்கு ஆனவத்தை தருகிறது.
அலட்சியமாக நான் அவனை பார்ப்பதையும் அவன் ரசிக்கிறான், என் பார்வைக்காக ஏங்குகிறான்.
என் தனிமையில், அவன் செய்கை அத்துனையும் என்னி நான் அவனை அனு,அனுவாக ரசிக்கிறேன்.
எப்படியாவது காதலை என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் துடிப்பது எனக்கு தெரியாமல் இல்லை.
என்றாலும் நான் மிகவும் அழகி என்ற என்னுடைய ஆனவ உடல் மொழி அவனுக்கு அனுகூலம் செய்ய மறுக்கிறது. தடுக்கிறது.
அவனை அலைய விடலாம், அலை கழிக்கலாம் ,என்னை காதலிப்பது அவ்வளவு சுலமா என்ற திமிர் என்னுள் நிறையவே ஏற்பட்டாலும், அவனை என்றோ காதலிக்க தொடங்கி விட்டேன் என்ற உண்மை அவனுக்கு தெரியாது.
நான் செய்வது சரியா அல்லது தவறா
எனக்கு தெரியவில்லை.
காரணம் காதலில் எதிர்பார்தல்,தவிப்பு துடிப்பு,ஏக்கம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மனதை பார்த்து காதல் வருகிறது என்பதெல்லாம் சுத்த பொய்.
அழகை பார்த்து வருவதே காதல்.
அதிகபட்சம் ஏதோ ஒரு கவர்ச்சி இல்லாமல் காதல் வராது.
இங்கே மனம், குணம் எல்லாம் இரண்டாம் பட்சம்.
என்னிடம் நேருக்கு நேர் பேச முடியாத அவன் கடிதம் மூலம் காதல் சொன்னான்.
உலகில் உள்ள ஒட்டு மொத்த அழகையும் சுமந்து வரும் என்
இதய ராணியே!
பிரம்மன் படைப்பில் இது வரை காணாத அதிசியமே!
உன்னை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன், கிடைக்கவில்லை.
கடைசியில் உன் பெயரையே வர்ணனையாக எழுதுகிறேன்.
பெண்னே எனக்கு வாய் ஜாலம் இல்லை.
ஏதோ எழுதுகிறேன் உன்னை போல் பேரழகியை சந்தித்ததால்.
உன்னை காதலிப்பதே என் வாழ்க்கையின் லட்சியம்.
அழகு சிலையே!
தேவதை கூட்டத்து தலைவியே!
என் கனவு நாயகியே!
கொஞ்சம் உன் கடை கண் தரிசனம்
எப்போதும் உன் நினைத்து ஏங்கும் இந்த பாவி மேல் படாதோ!
கொஞ்சம் கருணை காட்டேன்.
உன் பார்வை ஒன்று போதுமே
நான் உயர, உயர, உயர பறக்க.....
- பாலு.