காதல் ♥️♥️
காதல் ❤
அவன்:- "அழகுக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவள்:- தேங்ஸ்.
அவன்:- நன்றி மட்டும் தானா....
அவள்:- சாரி, யு ஆர் டூ லேட் , ஸ்வீட் காலி ஆயிடுச்சு...
அவன் :- உங்கள் பேச்சே தேன் சொட்டும் போது, இனிப்பு இரண்டாம் பட்சம்.
அவள்:- அப்படியா...
அவன்:- உண்மை, நீங்கள் அனுமதித்தால் இன்னொரு உண்மை சொல்வேன்.
அவள்:- என்ன அது?
அவன்:- சொல்லிவிடவா
அவள்:- எனக்கு நிறைய வேலை இருக்கு, சீக்கிரம்...
அவன்:- நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க.
அவள்:- ( கலகலவென சிரித்து விட்டாள்) ரியலி...
அவன்:- உண்மை.
அவள்:- இதுக்கு பதில், எங்க அம்மா, அப்பா கிட்ட தான் நீங்கள் கேட்டு தெரிஞ்சிக்கனும்.
அவன்:- நீங்கள் பேசுவது என் காதில் கவிதையாக ஒலிக்கிறது.
அவள்:- நான் கவிதை ஏதும் சொல்லவில்லையே.
அவன்:- நீங்களே ஒரு கவிதை, கவிதையே கவிதை படித்தால், அதை இந்த மானுடம் கேட்டால் அதை விட இன்பம் வேறு உலகில் உள்ளதா
அவள்:- நல்லா பேசறீங்க...
அவன்:- நன்றி
அவள்:- நன்றி மட்டும் தானா
அவன்:- நீங்கள் வெறு என்ன என்னிடம்...
அவள்:- ஒரு கவிதை சொல்லுங்கள்.
அவன்:-
கவிதையே என்னிடம் கவிதை கேட்கிறது.
மலரே! வண்டிடம் தேன் கேட்கிறது .
தேனே! உன் இதழ் சுவைக்க ஆசைபடுகிறது.
கானல் நீர், உன் இடையாக மாற விண்ணப்பம் செய்கிறது.
முல்லைப்பூ, உன் சிரிப்பாக மாற விருபப்படுகிறது.
கலையே! உன் தேகத்தில்
நிரந்திர புகலிடம் கேட்கிறது.
அவள்:- ( முகம் சிவந்தாள்)
அவன்:- கவிதை, பிடிக்கவில்லையா?
அவள்:- ( அவனையே உற்று நோக்கினாள்)
அவன்:- உன் பார்வையின் பொருள் என்ன?
அது அம்பாக என் இதயத்தை தைக்கிறது.
பேரழகியே!
உன்னை வர்ணிக்க
பைந்தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன்
இந்தநோடி எதுவும் எனக்கு கிட்டவில்லை.
ஏன் மெளனம்...
அவள்:- ( நீண்ட நேர மெளனத்திற்கு பிறகு)
வாழ்த்துக்கள்
சொல்ல வந்த நீ!
என் வாழ்வின் புதுவசந்தம் நீ!
என் அழகை
வர்ணித்த நீ!
என் ஆழ் மனதில் நிரந்திர இடம்
பிடித்த நீ!
என் வாழ்நாள் இதயக்கனி நீ!
அவன்:- இளவரசியே, உண்மையாக.
அவள்:- i love you...டா..
அவன்:- ......
- பாலு.