புனைப்பெயர்
இறைவா நீ படைப்பவன்
நீயும் ஒரு படைப்பாளி ஆகையால்
உனக்கும் ஒரு புனைப்பெயர் சூட்ட ஆசைப்பட்டேன்
எச்சில் படாத புனிதமான பெயர்களை தேடி அலைந்தேன்
உனக்கு பொருத்தமாக ஒரு பெயர் கிடைத்தது அது விவசாயி
இன்றிலிருந்து இறைவா உன் புனைப்பெயர் விவசாயி
இனி நீயாகிலும் தற்கொலை செய்துக்கொள்ளாமலிரு...