கருவறையில் கரோனா
அம்மா
எட்டு மாதமாய் ஒலித்த
உன் குரல் ஏன் நின்று விட்டது
உன் பேச்சில் பிசிறு தட்டுகிறது
உன் குரல் சிதைந்து கிடக்கிறது
என்ன ஆயிற்று உனக்கு
உன் கொஞ்சல் சாரமற்று கேட்கிறது எனக்கு
நான் உன் கருவறையில் இருப்பதை
காலத்தின் நீட்சியில் கவனிக்க மறந்தாயோ
எட்டு மாதங்களாய் நீ என்னோடு பேசிய
ஆசை வார்த்தைகளால்
உன் அன்பையும் உன் அகிலத்தையும்
காண துடிக்கும் உன் கருவறை குழந்தை நான்
உன் வயிற்றில் சற்று வேகமாக உதைத்து விட்டேன்
என்ற கோபமா
ஏன் என்னோடு இப்போதெல்லாம் பேச
மறுக்கிறாய்
ஆசை முத்தம் ஆயிரம் தருவேன் என்றாயே
பட்டாடை கட்டி பாலும் பழமும்
பிசைந்தளிப்பேன் என்றாயே
உன் மார்பை எனக்கு மஞ்சமாக்குவேன்
உன் மடியை எண்ணெக்கு உலகமாக்குவேன்
கையாலே எனக்கு கம்பளம் நெய்வேன்
உறக்கம் தொலைத்து ஊர்கதைகள் பேசினாயே
ஏன் இன்று ஊமையாகி போனாய்
காலில் கிடத்தி குளிப்பாட்டுவேன்
தொழில் கிடத்தி தாலாட்டுவேன்
தொட்டில் உனக்கு நானாகுவேன்
எட்டி பிடித்து விளையாடுவேன்
யாரையும் உன்னை தொட விடமாட்டேன்
என்னாயிற்று உனக்கு ஏன் இந்த மௌனம்
கண்மை தீட்டி கவி பாடுவேன்
உண்மை கற்க நீதி கதை சொல்லுவேன்
நன்மை தீமை நானுரைப்பேன்
கொஞ்சும் கிளி என்றாய் கோவை பழம் என்றாய்
இன்றோ உன்னை சுற்றி கொரோன கொரோன
என்றே கேட்கிறதே
விலகி இரு என்று அடிக்கடி கூறுகிறாய்
விளக்கமென்னே தாயே
நான் எப்படியம்மா உன்னை விட்டு விலகுவது
உன் கருவறை தவிர அனைத்தும் எனக்கு சிறையறைஆனதோ
இல்லை உன் கருவறையே எனக்கு சிறையறை ஆனதோ