விதி

ஒட்டுமென்றதும் உறவுகொண்டவர் ஒடுவாரவர்
தொட்டுப்பார்க்கவும் துணிச்சலின்றியே விட்டுமாறுவர்
எட்டிப்பார்க்கவும் இதயமின்றியே ஏங்கிடாரவர்
கட்டிக்காத்தவர் கடைசிவார்த்தையை காதிடாதவர்
விட்டுநீங்கிட விதியழைத்ததும் விம்மிடாதவர்
கொட்டும்நீரிலும் கொரோனாவுண்டெனக் கூவுவாரவர்
நோயுடல்
புசித்திடும் நெருப்பதன் பசிக்கென
ருசித்திடும் உணவென விருப்பது விதியே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Apr-20, 11:05 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 117

மேலே