காதல் ♥️♥️

காதல் 🌹

ஏய் காதலே! சும்மா இருந்த என்னுள் ஏன் நுழைந்தாய்.
நான் ஏன் அந்த பெண்னை சந்திக்க வேண்டும்.
என் மனதில் அவள் மீது ஏன் காதல் அரும்ப வேண்டும்.
படித்து பட்டம் பெற நினைக்கும் எனக்கு காதல் வேண்டாம்.
பெரிய இலக்கை நோக்கி பயணிக்கும் எனக்கு காதல் வேண்டாம்.
வேண்டாம் , வேண்டாம் என்று என் உதடு உச்சரிக்க,
அவளை கண்டவுடன் கொள்கை அடிபட்டு காதல் விஸ்வரூபம் எடுக்கிறது.
இது பெரும் அவஸ்தை.
இது பெரும் போராட்டம்.
காதல் போன்ற மகோன்னத உணர்வை
கொண்டாடு.
காதல் உன் நேரத்தையும், காலத்தையும் விரயமாக்கிவிடும்.
ஆஹா! அவள் முகம் கண்டவுடன் என் மனம் பூரிக்கிறதே.
பூஞ்சோலை ஆகிறதே!
எப்போதும் மனித மனம் தவிர்பதையே தேடும்.
கொண்டாடும்.
அதோ அவள் வருகிறாள்.
தென்றலாக.
என்னை பார்கிறாள்.
சுண்டி இழுக்கும் அந்த பார்வை.
என் இலக்கை தவிடு பொடி அக்கிவிடுதே.
காதல் ஒரு மாயை.
வேண்டாமே காதல்.
அவளை பார்ப்பதை தவிர்த்து விடேன்.
சரி முயற்சிக்கிறேன்.
இனி எனக்கு காதல் வேண்டாம்.
படிப்பு, படிப்பு, என் கவணம் முழுவதும் படிப்பில் தான்.
என்னால் முடியும்.
என்னால் என்னை கட்டு படுத்த முடியும்.
இதோ, இந்த நிமிடம், ஏன், இந்த நொடியில் இருந்து நான் என் காதலை வேறுடன் பிடுங்கி எறிந்துவிட்டேன்.
கதவு தட்டப்பட்டது.
திறந்தேன்.
அவள் தேவதை என நின்றிருந்தாள்.
ஒரு கடிதத்தை என்னை நோக்கி வீசிவிட்டு,
தன் உதட்டோர புன்னகையையும் கூடுதலாக என் நோக்கி மீது வீசிவிட்டு சிட்டாக பறந்து விட்டாள்.
அந்த கடிதத்தில்

ஆண்மகனே!
மன்னிக்கவும்,
அழகிய என் ஆண் மகனே!
என் உள்ளம் கவர்ந்த கள்வனே!
நீ என்ன ராஜராஜசோழன் பரம்பரையா?
வீரமும், காதலையும் கண்களில் நிரந்திரமாக வைத்துள்ளாய்.
நீ என் கோவலன்.
நான் உன் காதல் மாதவி.
வில்லேந்தி வந்த என் இராமனே!
நான் உன் மிதிலை மாநகரத்து அழகிய சீதை.
நீல நிற மணிவண்ணா
நான் உன்னுடைய காதல் ருக்மணி.
வேலுடன் இருக்கும் அழகிய முருகா
நான் உன் காதல் தெய்வானை.
இந்த மலர் உனக்காகவே
பூத்தது.
இதில் நீயே தேன் எடுக்கவே என் ஆசை.
மாய கண்ணா!
உன் மந்திர கண்கள்
என் உள்ளம் புகுந்து
என் பெண்மையை பாடாய் படுத்துகிறது.
மனதை உன்னிடம்
பறிகொடுத்த
உன் அன்பு காதலி.
முடிவாக,
காதல்!
மானுடத்தின் உரிமை
உரிமையை இழக்காதே.

விதி வலியது.
கொள்கை மீண்டும் ஒரு முறை காற்றில் பறக்கவிடப்பட்டது.
காரணங்களை எளிதாக தேடும் மனிதன்.
ஏன் காதலையும், படிப்பையும் தண்டவாளம் போல் எடுத்து கொள்ள கூடாது.
வாழ்க்கையில் காதலித்தவர்கள் எல்லாம் தோற்றவர்களா?
இல்லையே!
என் அன்பு காதலியே,
நான் உன்னை காதலிக்கிறேன்.....
மானுடம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.
லட்சியம் வெல்லுமா?
ஆசை வெல்லுமா?
- பாலு.

எழுதியவர் : பாலு (2-Apr-20, 7:31 pm)
சேர்த்தது : balu
பார்வை : 357

மேலே