தேடுகிறேன் எனக்கென ஒருத்தியை
தேடுகிறேன் எனக்கென ஒருத்தியை..
கரு விழியால்; நீ விரித்த வலை
கார்மேகம் பொழிந்ததாய்
என் விழிகளில் நீர்...
பெண்ணே உன்னைப் பார்க்கமுன்
என் அன்னையைக் கண்டேன்..
அவளின் மறுபிறவியாய் நீ யென...
உன்னுள் உறைந்து கிடப்பது
நவீனத்து அழகுமட்டும் தான்..
அன்பு அல்ல... கண்டு கொண்டேன்...
விடிகாலை ஒர் அழகும்
மாலைநேரம் மறு அழகுமாகவே
இரட்டை முக வாழ்வின் வலையில்
சிக்கிக் கிடக்கும் சருகுகள் நீஙகள்..
உன் கருவிழி கூட நிஜமில்லை!!!
நீ அழுதபோது கண்டுகொண்டேன்..
விழிநீரில் கரைந்து போகும்
வெள்ளைப் பூச்சுக்களைப்போல்
உன் வாழ்வும் ஒருநாள்
நிஜத்தில் கரைந்து போகும்.
தேடுகிறேன் எனக்கென ஒருத்தியை
முகங்கழுவாக் காலைப்பொழுதில்
அவளோடு பேசுவதற்கு...
உண்மை அழகைக் காணுவதற்காக...